tamilnadu

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

சென்னை, நவ. 26 - சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி   தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் செவ்வாயன்று (நவ. 26) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியர்க ளுக்கும், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ 5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்து ணவு மையங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலை வாசி உயர்வுக்கேற்ப உணவு கூட்டு  செலவு மானியத்தை ரூ.5 ஆக உயர்த்தி மாணவர்க ளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மறியல் போராட்டத்தில் வலியுறுத்த ப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டச் செயலாளர் அந்தோணிசாமி துவக்கிவைத்தார். சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.கேசவன் தலைமை தாங்கினார்.  மாநிலச் செய லாளர் சுபந்தி, மாவட்டச் செயலாளர் இ.குப்பம்மாள், மாவட்ட துணைத் தலை வர்கள் சிவக்குமார், காளி தாஸ், கற்பகம், மலர்விழி மற்றும் மாவட்ட இணைச் செயலாளர்கள் அண்ண பூரணி, ரமணி, சித்ரகலா, மாவட்ட பொருளாளர் சுந்தர மூர்த்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சொர்ணம், டி. தேவிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது  செய்தனர். பிறகு  மாலை யில் அவர்களை விடுவித்த னர்.